இந்தியா

அகமதாபாத் விமான விபத்து : மனித தவறால் நிகழ்ந்ததா? சர்ச்சையை ஏற்படுத்திய விசாரணை!

இந்தியாவின் அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் குறித்த வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விபத்தில் விமானத்தில் பயணித்த 240 பேரும் தரையில் இருந்த 19 பேரும் உயிரிழந்திருந்தனர். ஒருவர் மாத்திரமே உயிர் தப்பினார்.

விமானத்தில் குறைப்பாடுகள் இருந்ததாக குற்றம் சாட்டப்படுகின்றபோதிலும் புலனாய்வாளர்கள் உரிய ஆதாரங்களை கண்டுப்பிடிக்கவில்லை.

இந்நிலையில், விமானத்தை செலுத்திய விமானியின் உறவினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளனர். விமானி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எரிபொருள் சுவிட்சுகள் ‘கட்ஆஃப்’ நிலைக்கு மாற்றப்பட்டதாக அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே போயிங் மற்றும் ஏர் இந்தியாவுக்கு எதிரான வழக்குகள் விமானத்தில் உள்ளார்ந்த குறைபாடுகள் இருந்ததாகக் கூறுகின்றன.

வரும் ஜுன் மாதம் இறுதி விசாரணை இடம்பெறவுள்ள நிலையில், வழக்கு விசாரணைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்படத்தக்கது.

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே