ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்கா – மாலியில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம் : பலர் பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர்.

இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் உயிரிழந்துள்ளதாக மேற்கு ஆப்பிரிக்க நாடான கூலிகோரோ பிராந்தியத்தின் ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.

ஆப்பிரிக்காவில் தங்கம் உற்பத்தி செய்யும் மூன்று நாடுகளில் ஒன்றாக அறியப்படும் மாலியில் உள்ள தங்கச் சுரங்கத்தில் இதுபோன்ற விபத்துக்கள் அதிகளவில் ஏற்படுகின்றன.

கடந்த ஆண்டு ஜனவரியில், மாலியில் ஒரு கட்டுப்பாடற்ற தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் எழுபது பேர் வரையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு