ஐரோப்பா

இலங்கையில் பெண்களுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

இலங்கையில் பெண்களுக்கான பாதுகாப்பு இல்லத்தையும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இயக்கும் பாதுகாப்பு இல்ல வலையமைப்பில் இணைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

2025 ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நுவரெலியா மாவட்டத்திலும் புதிய பாதுகாப்பு இல்லம் நிறுவப்பட்டுள்ளது.

துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான பெண்களுக்கான பாதுகாப்பு இல்லம் அமைக்கப்படவுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவையில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குதல் அரசினால் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பாகும்.

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் 10 மாவட்டங்களில் பாதுகாப்பு இல்லங்கள் இயக்கப்படுவதுடன், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து மேற்குறித்த இல்லங்களின் செலவுகள் மேற்கொள்ளப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்