இந்தியா

இந்தியாவில் பாரிய போராட்டத்தை மேற்கொள்ளும் விவசாயிகள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மத்திய அரசு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, போராட்டத்தை நடத்தி வந்த இந்திய விவசாயிகள் மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடங்கினர்.

தலைநகர் டெல்லியை அடைவதே அவர்களின் நோக்கம்.

விளைபொருட்களுக்கு நிலையான விலை வழங்க வேண்டும் என்று கூறும் விவசாயிகள், போராட்டம் தீவிரமடையும் என எச்சரித்துள்ளனர்.

விவசாயிகள் வருகையை தடுக்கும் வகையில் டெல்லி செல்லும் சாலைகளில் முள்கம்பிகள் மற்றும் பிற தடுப்பு வேலிகள் போடப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால், தடைகளைத் தாண்டிச் செல்லும் வலிமை தங்களுக்கு இருப்பதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

சில போராட்டக்காரர்கள் புல்டோசர்கள் மற்றும் பெரிய டிராக்டர்களை போராட்டத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

குறிப்பாக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், விவசாயிகள் தடுப்புகளை உடைத்து முன்னேறியபோது, ​​அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே