இலங்கை

திருகோணமலையில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய வேன் – பரிதாபமாக பலியான சிறுமி !

திருகோணமலை-உட்துறைமுக வீதியில் வேனொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.இவ்விபத்து நேற்றிரவு (25) இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் கல்வி பயின்று வரும் திருமலை டொக்யாட் வீதி இணக்கம் 156/6 இல் வசித்து வரும் எட்ரிக் செர்லின் (09) என்ற சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மோட்டார் சைக்கிளில் தாய், மகள் மற்றும் அவரது தம்பியின் மகள் ஆகியோர் பயணித்துக் கொண்டிருந்த வேலையில் எதிரே வந்த சொகுசு வேனொன்று மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது-தனியார் மருத்துவமனையில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய தாயாருக்கு வழங்கப்பட்ட மாத்திரையை உட்கொண்ட போது குறித்த தாயாருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனக்குடா பகுதியில் இருந்து வேனில் தாயாரை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வேகமாக கொண்டு செல்லும் வேளையில் எதிராக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகவும் இதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்