இலங்கை

யாழில் வீடொன்றினுள் நுழைந்த மரம் கும்பல் – உடமைகள் சேதம்

யாழில் வீடொன்றினுள் நுழைந்த மரம் கும்பலால் உடமைகள் சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த உடமைகளை அடித்து உடைத்து சேதம் ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.

குறித்த வீட்டினுள் நேற்று முன்தினம் இரவு வேளை மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 இற்கும் மேற்பட்ட வன்முறை கும்பல் வீட்டின் யன்னல் கண்ணாடிகள், கதவுகள், வீட்டில் இருந்த உடைமைகள் என்பவற்றை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

தாக்குதலாளிகள் தங்கள் முகங்களை மறைத்து முகமூடிகளை அணிந்து இருந்ததாகவும், தாக்குதலினால் 02 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் வீட்டார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்