கம்போடியாவில் கணினி குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு
கம்போடியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
லக்ஷபான பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் கடந்த வருடம் மார்ச் மாதம் 4 ஆம் திகதி பணி நிமித்தம் கம்போடியாவிற்கு சென்றுள்ளார்.
கடந்த மாதம் 22ம் திகதி மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார்.
இது தொடர்பில் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவரது பூதவுடல் நாட்டுக்கு கொண்டு வரப்படுமா அல்லது கம்போடியாவில் தகனம் செய்யப்படுமா என்பது தொடர்பில் உறவினர்களின் பதிலுக்காக காத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
(Visited 5 times, 1 visits today)