நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன

மஹிங்கல, பாதுக்க பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டியும் முச்சக்கரவண்டியும் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹொரணை நகரசபை தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்க வந்த போது, இரண்டு வாகனங்களும் ஏற்கனவே தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வாகனங்கள் ஏலத்தோட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த காணிக்குள் எவரும் நுழைய முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த வாகனங்களுக்கு யாரேனும் தீ வைத்தனரா அல்லது தீ ஏற்பட்டமைக்கான சரியான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(Visited 24 times, 1 visits today)