இலங்கை

வவுனியாவில் உளுந்து வடை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வவுனியாவில் உளுந்து வடையில் சட்டைப்பின் (Safety pin) ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உணவகம் ஒன்றிலிருந்து வாடிக்கையாளர் ஒருவர் நேற்று வாங்கிய உளுந்து வடையிலேயே இந்த சட்டைப்பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் உளுந்து வடையை வாங்கி, வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது குடும்பத்தினருடன் சாப்பிடத் தயாராக இருந்தபோது, ​​உளுந்து வடைகளில் ஒன்றிலேயே இவ்வாறு சட்டைப்பின் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து உணவக உரிமையாளரைச் சந்தித்துத் திட்டிய பிறகு, உணவக உரிமையாளர் வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அத்துடன் உளுந்து வடைக்காகப் பெற்றுக் கொண்ட பணத்தையும் உணவக உரிமையாளர் திருப்பிக் கொடுத்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்