ஐரோப்பா

பாகிஸ்தானில் செங்குத்தாக பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து : 28 பேர் ஸ்தலத்தில் பலி!

தென்மேற்கு பாகிஸ்தானில் அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

இதில் பேருந்தில் பயணித்த 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான டர்பத்தில் இருந்து மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிற்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருந்து ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்பு படையினர் விரைந்து செயற்பட்டு காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்