ஐரோப்பா

பிரான்ஸில் பொலிஸ் அதிகாரியின் மோசமான செயல்

பிரான்ஸில் பொலிஸ் அதிகாரியின் மோசமான செயல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவர் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ளார். 45 வயதுடைய Xavier P எனும் பொலிஸ் அதிகாரி எசோன் மாவட்டத்தில் பணிபுரிகிறார்.

2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டுக்கு இடையிலான காலத்தில் அவர் மூன்று பெண்கள் மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், இரண்டு மாதங்களின் பின்னர் தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மனநலம் பரிசோதிக்கப்படுவதற்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்