வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் பலி!
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தநபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்றைய தினம் உயிரிழந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் பதவியா பிரதேசத்தை சேர்ந்த 55 நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
(Visited 4 times, 1 visits today)