பொழுதுபோக்கு

குறி வச்சா இரை விழணும்.. தலைவர் 170 படத்தின் டைட்டில் வெளியானது…

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வீடியோவுடன் தலைவர் 170 படத்தின் தாறுமாறு அப்டேட் வெளியாகி உள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கி மீண்டும் ரஜினி ராஜ்யத்தை தமிழ் சினிமாவில் கொண்டு வந்துள்ளார். காலா, தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ஜெயிலர் படம் 600 கோடி வசூல் சாதனையை படைத்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக போகிறது. அடுத்ததாக த.செ. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் ஃபாசில், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் தலைவர் 170 படத்திற்கு வேட்டையன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். “குறி வச்சா இரை விழணும் என ரஜினி பேசும் பஞ்ச் வசனம் மற்றும் அந்த கண்ணாடி கூலர்ஸாக மாறுவது வேறலெவல்.

ஜெய்பீம் படத்தை விட தலைவர் 170 படத்தில் வலிமையான திரைக்கதை இருக்கும் என்பது தற்போது உறுதியாகி உள்ளது. ஜெயிலர் படத்தை போலவே இந்த படமும் பான் இந்தியா படமாகவும் மல்டி ஸ்டாரர்கள் நிறைந்துள்ள நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்றும் தெரிகிறது. அடுத்து தலைவர் 171 அப்டேட் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content