பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலத்தை 03 வருடங்களாக மட்டுப்படுத்த கவனம்
பொலிஸ் மா அதிபராக வரும் அதிகாரியின் பதவிக் காலத்தை அதிகபட்சமாக 03 வருடங்களாக மட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பான பிரேரணை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த முடிவின்படி, பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்படும் அதிகாரிக்கு 03 வருட சேவையின் முடிவில் 60 வயதாகாவிட்டாலும் அந்தத் தீர்மானம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)