பிரபு வீட்டில் தடபுடலாக நடக்க போகும் 2ஆம் திருமணம் – சிமடபுவுக்கு இதுக்கும் என்ன சம்பந்தம்?
சிம்புவின் பரம எதிரியாக நினைக்கும் ஒருவர் சிவாஜி வீட்டு மாப்பிள்ளை ஆக இருக்கிறார்.
சமீபத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி மிக பெரும் வரவேற்பை பெற்றது. விஷால், எஸ் ஜே சூர்யா என்ற இரண்டு முரட்டு சிங்கிள்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார்.
பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை இவர் கரம் பிடிக்க இருக்கும் செய்தி தான் இப்போது வைரலாகி வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு சிம்புவை வைத்து இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படுதோல்வியை தழுவியது. அந்த சமயத்தில் சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வராததும் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அதிலிருந்தே இவர்கள் இருவரும் எதிரிகளாக மாறிப் போய் இருக்கின்றனர்.
அந்த வகையில் சிம்புவின் எதிரியான ஆதிக் ரவிச்சந்திரன் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி தடபுடலாக நடக்க இருக்கிறது.
ஏற்கனவே ஐஸ்வர்யா கடந்த 2009 ஆம் ஆண்டு குணால் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார்.
ஆனால் தற்போது அவர் விவாகரத்து பெற்ற நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் ஐஸ்வர்யாவுக்கு காதல் மலர்ந்திருக்கிறது. இதற்கு இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில் திருமண தேதியும் முடிவாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளிவர இருக்கிறது.