வட அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் கனடா இடையே மதில் சுவர் அமைக்க வேண்டும் – ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமி

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் மதில் சுவர் அமைக்கப்பட வேண்டும் என அமெரிக்க குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான விவேக் ராமசாமி கூறியுள்ளார்.

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக சில வேட்பாளர்கள் கட்சிக்குள் போட்டியிட்டு வருகின்றனர்.அவர்களில் ஒருவராக விவேக் ராமசாமி காணப்படுகின்றார்.

கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் மதில் சுவர் எழுப்பப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தல்கள் மற்றும் சட்டவிராத போதை மருந்து கடத்தல்கள் போன்றவற்றை தடுக்கும் நோக்கில் இவ்வாறு மதில் சுவர் உருவாக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.தமது கட்சியின் எல்லை பாதுகாப்பு கொள்கை போதுமானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

மியாமியில் நடைபெற்ற வேட்பாளர் தெரிவு விவாதமொன்றில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்