இலங்கை

இலங்கையில் மாயமாகியுள்ள துப்பாக்கிகள் : நாச வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதா?

மாநில அமைச்சர் டி. வி. சானக்கவின் மாமனார் லலித் வசந்த மென்டிஸின்  கொலைக்கு கரந்தெனிய இராணுவ முகாமில் இருந்து திருடப்பட்ட துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அண்மையில் கரந்தெனிய இராணுவ முகாமின் உயர் அதிகாரியொருவர் எல்பிட்டிய பொலிஸில் T-56 துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்திருந்தார்.

இதன்படி, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​குறித்த முகாமின் ஆயுதக் கிடங்கிற்கு அருகில் புதைத்து வைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 14 மகசீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 2020ஆம் ஆண்டு மின்னேரிய இராணுவ முகாமில் இருந்து 74 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் ஹோமாகம உள்ளிட்ட பல பிரதேசங்களில் 36 துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 38 துப்பாக்கிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவ்வாறான துப்பாக்கிகள் எதுவும் இடம் பெறவில்லை எனவும் இராணுவம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்