மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்களிடம் கருத்து கோரல்!
வறண்ட காலநிலை நிலவிய மாதங்களில் அனல் மின் உற்பத்திக்கான செலவினங்களை ஈடுசெய்ய வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி, மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட இந்த ஆண்டுக்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்தைப் பெறுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இவங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தத்தை www.pucsl.gov.lk என்ற இணையதளத்தில் அணுகலாம்.
இந்த மின் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய ஏனைய தரப்பினரால் முன்வைக்கப்படும் எழுத்துமூலமான கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.