இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிகளின் குழந்தைகளுக்கு கிடைத்த கௌரவம்!
இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிகளின் குழந்தைகள் இனி இளவரசர், இளவரசி என அழைக்கப்படுவார்கள் என பங்கிங்ஹாம் அரண்மணை அறிவித்துள்ளது.
இங்கிலாந்து மன்னர் சார்ல்சின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, இவர் அமெரிக்காவைச் சேர்ந்த, டிவி நடிகை மேகன் மார்கெலை காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு ஹாரி-மேகன் தம்பதிக்கு ஆர்ச்சி என்ற 3 வயது மகனும், லிலிபெட் என்ற 1 வயது மகளும் உள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் அரச குடும்பத்தை விட்டு விலகி அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இதனால் பல்வேறு சர்சைகளும் தோண்றியிருந்தது.
இந்த நிலையில் ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகள் இருவரும் அரச குடும்பத்தின் அரச பட்டங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், இனி அவர்கள் முறையாக இளவரசர் ஆர்ச்சி, இளவரசி லிலிபெட் என அழைக்கப்படுவார்கள் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.