இலங்கை

”பொலீசார் வேடிக்கை பார்க்க திலீபனின் வாகன ஊர்தி தாக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாத காட்டுமிராண்டி தனம்” -வி.மணிவண்ணன்

தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கிய வாகன ஊர்தியை பொலீசார் வேடிக்கை பார்க்க சிங்கள காடையர்கள் தாக்கி சேதப்படுத்தியமையும் அவ் வாகன அணியோடு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமையும் ஏற்றுக்கொள்ள முடியாத காட்டுமிராண்டி தனம் என யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

தியாகதீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டணம் தெரிவித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி குறிப்பில், ”தியாக தீபம் திலீபன் அண்ணாவின் உருவப்படத்தை தாங்கிய வாகன ஊர்தியை பொலீசார் வேடிக்கை பார்க்க சிங்கள காடையர்கள் தாக்கி சேதப்படுத்தியமையும் அவ் வாகன அணியோடு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமையும் ஏற்றுக்கொள்ள முடியாத காட்டுமிராண்டி தனம். இந்த ஈன செயலை வன்மையாக கண்டிக்கின்றேன்.

உண்ணா நோன்பிருந்து அகிம்சை போர் தொடுத்து ஈகச்சாவடைந்ந உத்தமனை நினைவு கூர கூட இந்த மண்ணில் அனுமதி இல்லை என்பதை இது காட்டி நிற்கின்றது. இச் செயல் இந்த நாட்டில் ஒருபோதும் நல்லிணக்கம் சாத்தியம் இல்லை என்பதையும் தமிழ்மக்கள் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ அனுமதிக்கப்படப் போவதில்லை என்பதையும் பட்டவர்த்தனமாக காட்டுகின்றது. இதனை சர்வதேசம் கண்டும் காணாதிருப்பது தான் வேதனையானது” என்றுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்