BREAKING; பிரபல நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து திடீர் மரணம்

நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து சற்றுமுன் மாரடைப்பால் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு உயிரிழக்கும் போது 57 வயது என தெரிவிக்கப்படுகின்றது.
சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலமாக பிரபலமானவர் மாரிமுத்து.
இவர் இயக்குநர் என்பதை கடந்து பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று தொலைகாட்சி தொடருக்கு டப்பிங் பேசும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இது அவரது ரசிகர்கள் உட்பட திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 10 times, 1 visits today)