ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்.. என்ன நடந்தது?
![](https://iftamil.com/wp-content/uploads/2023/08/on-38th-bday-ram-charan-reveals-next-film-is-titled-game-changer-001.jpg)
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’.
அரசியல் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அப்பா – மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனில், அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.