ஆசியா செய்தி

பாகிஸ்தானில் கோர விபத்து!! 18 பேர் உயிரிழப்பு

கிழக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கராச்சியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற போது, ​​இந்த பேருந்து இன்று அதிகாலை மற்றொரு வாகனத்தின் மீது மோதியது.

இவ்விபத்தில் இரு வாகனங்களும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் சாரதிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

பேருந்தில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் மிகவும் எரிந்த நிலையில் காணப்பட்ட நிலையில் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி