இலங்கை விளையாட்டு

LPL – வெற்றி வாகை சூடிய பி – லவ் கண்டி அணி

நடப்பு லங்கா பிரீமியர் லீக் தொடரின் வெற்றி வாகையை பி – லவ் கண்டி அணி சூடிக்கொண்டுள்ளது.

தம்புள்ளை அவுரா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பி – லவ் கண்டி அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றிப் பெற்று கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புளை அவுரா அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அந்த அணியின் சார்பில் தனஞ்சய டி சில்வா 40 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 36 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். கண்டி அணி சார்பில் சதுரங்க டி சில்வா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பி – லவ் கண்டி அணியினர் 19.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றுள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் பி – லவ் கண்டி அணியினர் முதல் முறையாக லங்கா பிரீமியர் லீக் கிண்ணத்தை தனதாக்கியுள்ளனர்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்