செய்தி விளையாட்டு

DLS முறையில் இந்தியா அணி 2 ஓட்டங்களால் வெற்றி

இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பும்ரா பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 139 ரன்களை சேர்த்தது. பாரி மெக்கார்தி அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். கேம்பர் 39 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்து அவுட்டானார். திலக் வர்மா டக் அவுட்டானார். ருதுராஜ் 19 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்திய அணி 6.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

அதன்படி இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி