திருமணமாகி சில மாதங்களிலேயே உயிரிழந்த பெண்!
திருமணமாகி 4 மாதங்களில் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த சுகிர்தராசா நிதர்சினி (வயது 27) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூன்று நாட்களாக கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், நேற்று திங்கட்கிழமை (17)தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
(Visited 9 times, 1 visits today)