இலங்கை

டக்ளஸ் தலைமையில் நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு கூட்டம்

யாழ் நெடுந்தீவு பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்தி ஒருங்கினைப்பு குழு கூட்டம் யாழப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமாகிய டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (14) பகல் 9.30 மணிக்கு நெடுந்தீவு பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நெடுந்தீவு பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலில் ஆரம்பமான பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், பிரதேசத்தின் கடல் போக்குவரத்து சுற்றுலாத்துறை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள், அவற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

மேலும் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள், அவற்றின் தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக சுகாதாரம், கல்வி, வீட்டுத்திட்டம், உள்ளூராட்சி, கூட்டுறவு, நீர்வழங்கல், மின்சாரம்,போக்குவரத்து, சமுர்த்தி, விவசாயம், நீர்ப்பாசணம், வாழ்வாதாரம், மீன்பிடி, வீதி புனரமைப்பு காணிஉள்ளிட்ட பல்வேறு துறைகள் ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்