ஆஸ்திரேலியா உலகம் செய்தி

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொடூரச் செயல்: ஆஸ்திரேலிய இளைஞன் கைது

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சிறார் பாலியல் சுரண்டல் சார்ந்த காட்சிப் பொருட்களை உருவாக்கிய மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காக நபர் ஒருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சிறார் பாலியல் சுரண்டல் சார்ந்த காட்சிப் பொருட்களை உருவாக்கிய மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காக நபர் ஒருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக தெற்கு ஆஸ்திரேலியா பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ சிறுவர்கள் சுரண்டல் எதிர்ப்புப் பிரிவு’ (Joint Anti Child Exploitation Team) புலனாய்வாளர்கள், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் (Adelaide) வடக்கு புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரை நேற்று கைது செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.

அவரிடமிருந்த மின்னணு சாதனங்களை ஆய்வு செய்தபோது, அந்த முகவரியில் இருந்தபடி அவர் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தைகள் பாலியல் சுரண்டல் காட்சிப் பொருட்களை உருவாக்கியது கண்டறியப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மேலதிக ஆய்வுகளுக்காகப் பிற மின்னணு சாதனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்துப் பொதுப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, டிடெக்டிவ் சூப்பரின்டென்டன்ட் டாமியன் எப்ஸ் (Damien Epps) கருத்து தெரிவிக்கையில்:

“AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறுவர்கள் துஷ்பிரயோகக் காட்சிப் பொருட்களை உருவாக்குவது, வைத்திருப்பது மற்றும் விநியோகிப்பது என்பது மிகவும் கொடூரமான குற்றமாகும்.

தெற்கு ஆஸ்திரேலியாவிற்குள் இத்தகைய குற்றங்களில் ஈடுபட முயலும் எவரையும் கண்டறிந்து, புலனாய்வு செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான அதிநவீன கருவிகளும் நிபுணத்துவமும் எங்களது சிறப்புப் புலனாய்வாளர்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் பிரிவினரிடம் உள்ளன,” என்று கூறினார்.

கைது செய்யப்பட்ட நபருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் அடிலெய்ட் நீதவான் நீதிமன்றத்தில் (Adelaide Magistrates Court) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி