உலகம்

வெனிசுலாவில் சுகாதார நெருக்கடி : மருத்துவர்கள் எச்சரிக்கை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள இரட்டை நிலநடுக்கங்கள் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் நேற்றைய தினம் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து வெனிசுலா மக்கள் நெரிசலான தங்குமிடங்களில் இருப்பதாகவும்,   சுத்தமான நீர் வசதியின்றி தவிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கங்களில் குறைந்தது 2,295 பேர் உயிரிழந்ததாகவும், 11,000இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

நிலநடுக்கங்களின் பின்விளைவுகள் ஒரு பெரிய மருத்துவ நெருக்கடியாக மாறியுள்ளதாகவும், இது விரைவாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், வரும் நாட்களில் மற்றும் வாரங்களில் மேலும் பல உயிர்களைப் பறிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும்  என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பல ஆண்டுகால பொருளாதார நெருக்கடி, போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது மற்றும் குடிபெயர்வு ஆகியவற்றின் விளைவாக வெனிசுலாவில் நிலவும் நாள்பட்ட மருத்துவர் பற்றாக்குறையை இந்த அவசரநிலை வெளிப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்