ஐரோப்பா

Ukவில் 13 மாதக் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்!! உயர்நிலைப் பாடசாலை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவில்  37 வயதான ஜேமி வார்லி (Jamie Varley) என்ற  உயர்நிலைப் பாடசாலை ஆசிரியர், 13 மாதக் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில்  குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

13 மாதக் குழந்தையான பிரஸ்டன் டேவியை (Preston Davey) பாலியல் துஷ்பிரயோத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன், கொடுமை செய்து பின்னர் கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரஸ்டன் 09 மாதக் குழந்தையாக இருந்தபோது  ​​ஏப்ரல் 2023-ல் வார்லி மற்றும் மெக்கவன்-ஃபாசக்கர்லி  (McGowan-Fazakerley) தம்பதியால் தத்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரஸ்டன் அவர்களின் பராமரிப்பில் இருந்த சுமார் நான்கு மாத காலத்தில், பாலியல் வன்கொடுமை மற்றும் உடல்ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகி, 40 கடுமையான காயங்களைப் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வார்லி அக்குழந்தையின் ஆபாசமான படங்களையும் காணொளிகளையும் எடுத்து விநியோகித்துள்ளார்.

இந்த வழக்கு பிரஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சுமார் 08 வாரங்களாக இடம்பெற்ற விசாரணையை தொடர்ந்து நடுவர் குழு அவர்களை குற்றவாளியாக அறிவித்ததுடன் வரும் வியாழக்கிழமை தண்டனை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்