போர் விமானங்கள், கப்பல்களை களமிறக்கும் பிரான்ஸ்!
ஹார்முஸ் நீரிணை கடல் வழித்தடத்தை மீண்டும் திறப்பதற்கான கூட்டு ராணுவ நடவடிக்கை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தொடங்கப்படலாம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron அறிவித்துள்ளார்.
பிரான்சில் இன்று நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த இந்த தகவலை வெளியிட்டார்.
ஹார்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை மீண்டும் நிலைநிறுத்த பிரிட்டனும் பிரான்சும் மிக விரைவாகச் செயல்படத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் பின்வரும் அதிநவீன ராணுவப் பலத்தை பிரான்ஸ் களமிறக்கவுள்ளதாக ஜனாதிபதி மக்ரோன் சுட்டிக்காட்டியுள்ளார்:
பாதுகாப்புப் பணிகளுக்காக பிராந்தியத்திற்குப் போர் விமானங்கள் மற்றும் Frigates ரகப் போர்க்கப்பல்கள் அனுப்பப்படும்.
கடலில் வீசப்பட்டுள்ள ஆபத்தான கண்ணிவெடிகளைப் பாதுகாப்பாக அகற்றுவதற்காக (Mine disposal experts) பிரத்யேகப் படையினர் அனுப்பப்படுவர்.
பிரான்சின் பிரம்மாண்டமான Charles de Gaulle) விமானம் தாங்கி போர்க்கப்பல் அதன் முழுமையான ஆதரவு உபகரணங்களுடன் ஏற்கனவே அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
அமைதி உடன்பாடு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட 2 அல்லது 3 நாட்களுக்குள் இது முழு அளவில் களமிறக்கப்படும்.
இந்த ராணுவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமெரிக்காவுடன் இணைந்தும், அதேவேளையில் “ஈரானியர்களுக்கு இணையாகவும்” (In parallel with the Iranians) முன்னெடுக்கப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதிஅதிபர் உறுதியளித்துள்ளார்.





