இலங்கை

பல்லேகம தேரரின் இரத்த மாதிரியை பெற உத்தரவு!

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பல்லேகம ஹேமரத்ன தேரரின் இரத்த மாதிரியை பெற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை  நேற்று  இடம்பெற்ற நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஹேமரத்ன தேரர், ஜூன் 16 ஆம் திகதி அன்று அரச இரசாயனப்பகுப்பாய்வு திணைக்களத்துக்குச் சென்று மரபணு பரிசோதனைக்கான இரத்த மாதிரியை வழங்க வேண்டும்.

தேரரிடமிருந்து மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியை பெற்றுக்கொண்டதன் பின்னர், மேற்கொள்ளப்படும் மரபணு பரிசோதனை (டி.என்.ஏ) அறிக்கையை அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகளால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்