UK மக்களுக்கு அவசர எச்சரிக்கை!! மீளக் கோரப்படும் பண்டம்!
பிரித்தானியாவில் ஹனிகோம்ப் பிளாஸ்ட் சாக்லேட் பார் (Honeycomb Blast Choc Bar) மீளக் கோரப்பட்டுள்ளது.
உணவு தர நிர்ணய முகமை (FSA) இந்த அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
லேபிளில் குறிப்பிடப்படாத பால் கலந்திருப்பதால் BM26105 என்ற தொகுதி குறியீட்டையும், 15 ஜூன் 2027 என்ற காலாவதியாகும் திகதியையும் கொண்ட சாக்லேட்டுகள் திரும்பப் பெறப்பட்டுகின்றன.
“பால் அல்லது பாலின் கூறுகளுக்கு ஒவ்வாமை அல்லது சகிப்புத்தன்மை இல்லாதவர்கள்” இந்தத் தயாரிப்பை வாங்கியிருந்தால், அதை உட்கொள்ள வேண்டாம் என்று FSA அறிவுறுத்தியுள்ளது.
“அதற்குப் பதிலாக, வாடிக்கையாளர்கள் முழுப் பணத்தையும் திரும்பப் பெற, அதை வாங்கிய கடைக்கே திருப்பிக் கொடுக்க வேண்டும்.” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.




