உலகம்

கியூபாவில் நாளாந்தம் மடியும் பிஞ்சு உயிர்கள்! அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கை!

கியூபாவில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் கம்யூனிச ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து தனக்கு அடிப்பணியவைக்கும் நோக்கில் அமெரிக்கா செயற்பட்டு வருகிறது.

இதற்கமைய கியூபா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது மட்டுமல்லாமல் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இது கியூப மக்களின் வாழ்வாரத்தை வெகுவாக பாதித்துள்ளது.

கியூபாவின் வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் (Bruno Rodriguez), “எரிபொருள் பற்றாக்குறையால், 6.3 மில்லியன் டொலர் (5.4 மில்லியன் யூரோ) மதிப்புள்ள 170 கொள்கலன் ஐ.நா. உதவிகள் பயனாளிகளைச் சென்றடையவில்லை” என்று கூறினார்.

இந்த முற்றுகையானது “கியூபாவின் பொருளாதாரச் செயல்பாட்டைத் தடுப்பது மட்டுமல்லாமல்”, சர்வதேச அமைப்புகளின் பணிகளையும் பாதிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய நாட்களில், ஹவானாவின் சில பகுதிகளில் 30 மணிநேரம் வரை மின்விநியோகம் தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உணவு, குடிநீர் மற்றும் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் வோல்கர் டர்க், அமெரிக்கத் தடைகளை “உடனடியாக நீக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

“மருத்துவர்களுக்கு அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகள் கிடைக்காததால் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்