இங்கிலாந்தின் உலகக் கோப்பை பயிற்சி முகாமுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு!
கொலம்பியா – மிசோரியில் (Missouri) உள்ள இங்கிலாந்தின் உலகக் கோப்பை பயிற்சி முகாமுக்கு அருகே நேற்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில் ஏறக்குறைய 09 பேர் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ஊழியர்கள் புளோரிடாவில் உள்ள பயிற்சி முகாமில் இருந்தமையால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணத்தை அறிய பொலிஸார் தற்போது விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





