சுரேஷ் சாலே வைத்தியசாலையில் அனுமதி!
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சாலே இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் கொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதற்கிடையே தமது மரணம் நெருங்கிவிட்டதாக உணர்வதால், கண்களைத் தானம் செய்வதற்கும் தமது இறுதி உயில் சாசனத்தைத் தயாரிப்பதற்கும் தேவையான ஆவணங்களை உடனடியாகக் கொண்டு வருமாறு சுரேஷ் சாலே தனது சட்டதரணிகளுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் தனது இறுதி உயிலை உருவாக்குவதற்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிப்பதற்காக, சட்டத்தரணிகள் தன்னை உடனடியாக வந்து சந்திக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுரேஷ் சாலேவை மனிதாபிமானமற்ற முறையிலும் கொடூரமாகவும் நடத்தப்படுவதற்குக் எதிர்ப்புத் தெரிவித்து நாளை காலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்க்கட்சியின் சில அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




