நோவாக்கின் மரணத்தை புலம்பெயர்ந்தோருடன் தொடர்புப்படுத்தி பேசிய வான்ஸ் : கொதித்தெழுந்த டவுனிங் தெரு!
அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் , ஹென்றி நோவாக்கின் கொலையை ஐரோப்பாவில் புலம் பெயர்ந்தோர் படையெடுப்புடன் தொடர்புப்படுத்தி பேசியமைக்கு பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜே.டி வான்ஸை தொலைபேசி வழியாக தொடர்புக்கொண்ட அவர், நோவாக்கைக் கொன்றவர் ஒரு பிரித்தானியர் என்றும், இந்தத் துயரச் சம்பவம் பெரும் குடியேற்றத்துடன் தொடர்பில்லாதது என்றும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், தங்கள் மகனின் மரணம் பிளவுகளுக்குப் பயன்படுத்தப்படக்கூடாது என்ற நோவாக் குடும்பத்தின் விருப்பத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை ஜே.டி வான்ஸின் கருத்துக்களை டவுன் தெரு விமர்சித்துள்ளது. அவர் “நமது ஜனநாயகத்தில் தலையிட முயற்சிக்கிறார்” என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
“புலம்பெயர்ந்தோரின் பெரும் படையெடுப்பை” எதிர்க்கத் தவறிய ஐரோப்பிய உயரடுக்கினரின் விளைவே நோவாக்கின் மரணம் என்று ஜே.டி வான்ஸ் டுவிட் செய்த நிலையில் இந்த விடயம் சர்ச்சைக்குரியதாக மாறியமை குறிப்பிடத்தக்கது.




