செய்தி விளையாட்டு

SL vs WI: மழை காரணமாக போட்டி ரத்து!

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

சபினா பூங்காவில் நடைபெறவிருந்த இந்த போட்டி, தொடர் மழையினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்த போதிலும், மோசமான வானிலை காரணமாக ஆட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.

இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ள போதிலும், அடுத்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் நிலையில் உள்ளது.

தரவரிசையை உயர்த்தி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அந்த அணிக்கு, வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டி மிகவும் முக்கியமானதாகும்.

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி