உலகம்

இதுவரை இல்லாத தொற்று பரவலாக மாறும் எபோலா : WHO எச்சரிக்கை!

காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் எபோலா பரவல், இதுவரை இல்லாத மிகப்பெரிய பரவல்களில் ஒன்றாக மாறக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிராந்தியம் முழுவதும் அதன் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே இந்த நெருக்கடியை  சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் முன்னறிவிப்பு மற்றும் நோய் பரவல் பகுப்பாய்வு மையத்தின் இயக்குநர் ஜேசன் ஆஷர் (Jason Asher), 2014 ஆம் ஆண்டின் பேரழிவுகரமான மேற்கு ஆப்பிரிக்கத் தொற்றுநோய்க்கு நிகராக மாறக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை எபோலா தொற்று காரணமாக காங்கோ குடியரசில் , 82 இறப்புகளும், உகாண்டாவில், 19 இறப்புகளும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்