இஸ்ரேலின் இரு அமைச்சர்களுக்கு பயணத்தடை விதித்தது அயர்லாந்து!
இஸ்ரேலின் முக்கிய இரு அமைச்சர்கள் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு அயர்லாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது.
அமைச்சர்களான Itamar Ben-Gvi மற்றும் Bezalel Smotrich ஆகியோருக்கே இவ்வாறு நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இவர்களின் வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் மற்றும் மனிதாபிமானமற்ற அணுகுமுறைகளே இந்தத் தீர்மானத்திற்குக் காரணம் என்று அயர்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பாலஸ்தீனியர்களை முற்றிலும் வெளியேற்ற முற்படும் இவர்களின் இனப்படுகொலை நோக்கம் கொண்ட கருத்துகளை அயர்லாந்து வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏற்கனவே பல நாடுகள் இந்த இரு அமைச்சர்களுக்கும் தடை விதித்துள்ள நிலையில், சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணைக்கும் இவர்கள் ஆளாக நேரிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தப் புதிய நடவடிக்கை இஸ்ரேலிய தீவிரவாதப் போக்குடைய தலைவர்களுக்கு எதிரான சர்வதேச நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.





