இந்தியா

எபோலா தொற்று அறிகுறி – ராஜஸ்தானில் பெண் ஒருவர் தனிமைப்படுத்தலில்!

ராஜஸ்தானில் எபோலா வைரஸ் தொற்றால் நபர் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் வேளையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏர் அரேபியா விமானத்தில் ஷார்ஜாவிலிருந்து ஜெய்ப்பூருக்கு வந்த  உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு எபோலா தொற்றுடன் ஒத்துப்போகும் அறிகுறிகள் தென்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாார்.

பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும் என மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!