FIFA World Cup 2026: தொடக்க விழாவில் Shakiraவின் இசை விருந்து!
கொலம்பியாவின் பிரபல பாப் இசை நட்சத்திரமான ஷகீரா (Shakira), 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காகத் தான் பாடியுள்ள அதிகாரப்பூர்வ பாடலை மெக்சிகோவில் நடைபெறவுள்ள தொடக்க விழாவில் மேடையேற்றவுள்ளார்.
மெக்சிகோ சிட்டியில் உள்ள புகழ்பெற்ற Estadio Azteca மைதானத்தில் ஜூன் 11, வியாழக்கிழமை தொடக்க விழா நடைபெறுகிறது.
இதில் நைஜீரியப் பாடகர் Burna Boy உடன் இணைந்து ஷகீரா Dai Dai பாடலைப் பாடவுள்ளார்.
இந்தத் தொடக்க விழாவைத் தொடர்ந்து, உலகக் கோப்பைத் தொடரின் ஒட்டுமொத்த 104 போட்டிகளில் முதலாவது போட்டியில் மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் (பிரித்தானிய நேரப்படி இரவு 8:00 மணிக்கு) மோதவுள்ளன.
Dai Dai என்பது “போகலாம்” அல்லது “வாருங்கள்” என்று பொருள்படும் ஒரு இத்தாலிய வார்த்தையாகும்.
இந்த முறை உலகக் கோப்பைத் தொடரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துவதால், அந்தந்த நாடுகளில் நடக்கும் முதல் போட்டிகளுக்கு முன்னதாக தனித்தனியாகத் தொடக்க விழாக்கள் நடத்தப்படவுள்ளன.





