ஐரோப்பா

நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு : முதல் முறையாக புட்டினுக்கு கடிதம் அனுப்பிய ஜெலென்ஸ்கி!

உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பில் ஒரு உடன்பாடு எட்டப்பட வேண்டுமானால் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்த வழி என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை எழுதிய அவர்,நேரடி சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

2022-ல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைன் ஜனாதிபதி புட்டினுக்கு பகிரங்கமாக கடிதம் எழுதியது இதுவே முதல் முறை.

இப்போது தேர்வு உங்களுடையது. போர் போதும். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் முன்மொழிகிறது,” என்று அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியப் பிராந்திய ரீதியான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் எனக் குறிப்பிட்ட அவர், அதற்கான ஒரு திகதியை நிர்ணயிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

“இந்தப் போரிலிருந்து வெளியேறும் பாதையைத் தேர்ந்தெடுக்க அஞ்சாதீர்கள். அதுதான் இப்போது உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் முக்கிய விஷயம்.” என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!