IT முகவர்கள் போல் வேஷம் : இணைய பாதுகாப்பு குறித்து FBI எச்சரிக்கை!
அமெரிக்க ஃபெடரல் புலனாய்வுப் பணியகம் (FBI) இணைய தாக்குதல்கள் குறித்து எச்சரித்துள்ளது.
கணினி அமைப்புகளை நேரடியாக அணுகுவதற்காக, இணையக் குற்றவாளிகள் தகவல் தொழில்நுட்ப (IT) ஆதரவுப் பணியாளர்கள் போல் நடித்து மோசடிகளில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
சைலன்ட் ரேன்சம் குரூப் (SRG) என அறியப்படும் ஒரு ஹேக்கிங் குழு, அமெரிக்க அலுவலகங்களுக்குள் நுழைந்து, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் போல் நடித்து, தீங்கிழைக்கும் மென்பொருளை (malware) நிறுவி, மோசடிகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் FBI தெரிவித்துள்ளது.
2022 முதல் செயல்பட்டு வரும் இந்த SRG குழு சமீபத்தில் தொலைநிலை இணையத் தாக்குதல்களில் இருந்து இந்த நேரடி ஹேக்கிங் தாக்குதல்களுக்கு மாறியுள்ளது.
இது முதன்மையாக சட்ட நிறுவனங்களைக் குறிவைப்பதாகவும், மருத்துவம் மற்றும் காப்பீட்டுத் துறைகளும் ஆபத்தில் உள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேம்பட்ட தொழில்நுட்பப் பாதுகாப்புகள் இருந்தபோதிலும், ஒரு சிறிய பொறிமுறை ஹேக்கர்களுக்கு சாதமாக மாறக்கூடும் என்பதால் மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




