பிரித்தானிய பாடசாலையொன்றில் 09 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு!
பிரித்தானியாவில் நாட்டிங்ஹாம்ஷையரில் (Nottinghamshire) உள்ள பாடசாலையொன்றில் மாணவர்கள் சிலருக்கு உடல்நலப்பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
பாடசாலை வளாகத்தில் உள்ள மரம் ஒன்றின் விதைகளை உட்கொண்டதைத் தொடர்ந்து 09 மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது குறித்த மாணவர்கள் நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.




