உலகம்

கலிபோர்னியாவில் மர்ம நபரின் சூழ்ச்சி : ஏராளமானோர் பணயக் கைதிகளாக பிடிப்பு!

கலிபோர்னியாவின் பேக்கர்ஸ்ஃபீல்ட் (Bakersfield) நகரின் மையப்பகுதியில் உள்ள வங்கியொன்றில், நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து ஏராளமானோரை பணயக் கைதியாக பிடித்து வைத்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளதுடன், அவரை அணுகுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதுவரை ஒரு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் நகர சபை மற்றும் காவல் தலைமையகம் உள்ளிட்ட அருகிலுள்ள கட்டிடங்கள் பூட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேக்கர்ஸ்ஃபீல்ட் காவல் துறையின் நெருக்கடி பேச்சுவார்த்தைக் குழு சந்தேக நபருடன் தொலைபேசி மூலம் தொடர்பில் உள்ளது.

அதே நேரத்தில் FBI முகவர்கள் உட்பட ஏராளமான சட்ட அமலாக்கப் பிரிவினர் அப்பகுதியில் குவிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சாலைகள் மூடப்பட்டுள்ளதால், நகரின் மையப்பகுதியைத் தவிர்க்குமாறும், அவசர சேவைகள் நிலைமையைப் பாதுகாப்பாகக் கையாள அனுமதிக்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!