உலகம்

ஜார்ஜியாவில் சோகம் : திருமணம் முடிந்த கையோடு மணமகன் உயிரிழப்பு!

ஜார்ஜியாவின் கிராமப்புறத்தில், புதுமணத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மணமகன் உயிரிழந்துள்ளதுடன், மணமகள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

ஜார்ஜியாவின் டாசன் கவுண்டியில் (Dawson County) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில், 25 வயதான மணமகன் டேவ் ஃபிஜியும், பெயர் குறிப்பிடப்படாத விமானியும் உயிரிழந்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு அவர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

பிரெஸ்டீஜ் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த ஹெலிகாப்டர், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியது. இது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!