ஐரோப்பா செய்தி

UK குடியேற்ற விதிகளில் மாற்றம் : சார்பு விசாவில் தங்கியிருப்போருக்கு சிக்கல்!

பிரித்தானியாவின் குடியேற்ற விதிகளில்  புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கமைய பிரித்தானியாவில் பெற்றோர்கள் சட்டப்பூர்வ அனுமதி கொண்டிருந்தாலும், அவர்களின் பிள்ளைகள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் உள்துறை அமைச்சகம் 05 குழந்தைகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆறாவதாக, கணவருடன் வசித்து வரும் கர்பிணிப் பெண் ஒருவருக்கும் வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி குழந்தைகளின் பெற்றோர் பிரித்தானியாவில் பராமரிப்பு பணியாளர் விசாவின் கீழ் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த விதிகளின் கீழ் இலங்கை குடும்பம் ஒன்று தற்போது பிரித்தானியாவில் இருந்து வேளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

பிரித்தானியாவில்  பராமரிப்புப் பணியாளராக இருக்கும் வருணி அரச்சிங்கே என்ற இலங்கையர் வெளியேற்ற உத்தரவை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் தங்களது விசா விண்ணப்பங்களுக்காக உள்துறை அமைச்சகத்திற்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகளைச் செலுத்தியுள்ளனர். எந்தவொரு சலுகைகளையும் கோருவதில்லை மற்றும் வரிகளையும் செலுத்துவதாகவும் கூறிள்ளார்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே அவர்கள் வெளியேற்ற உத்தரவுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!