போலந்தின் சர்ச்சைக்குரிய 666 பேருந்து சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!
போலந்தின் ஹெல் கடற்கரை சுற்றுலாத் தலத்திற்குச் செல்லும் சர்ச்சைக்குரிய 666 பேருந்து சேவை இந்த கோடை காலத்தில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
முன்னதாக PKS Gdynia நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை சில மதக் குழுக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டதுடன், 669 என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
அத்துடன் குறித்த பேருந்து நிறுவனம் “சாத்தானியத்தைப் பரப்புவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த சேவையை வழங்க ஃபிளிக்ஸ்பஸ் (FlixBus) என்ற பேருந்து நிறுவனம் முன்வந்துள்ளது.
666 என்ற பெயர் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேண்டுமென்றே வைக்கப்பட்டதாக ஃபிளிக்ஸ்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஃபிளிக்ஸ்பஸ் நிறுவனம், வார்சா (Warsaw) வழியாக கிராகோவையும் (Kraków) ஹெல் (Hel) நகரையும் இணைக்கும் 13 மணிநேர சேவையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




