தென்கொரியாவில் எரிபொருள் உற்பத்தி ஆலையில் விபத்து – ஐவர் பலி!
தென்கொரியாவின் ரொக்கெட் எரிபொருள் உற்பத்தி ஆலையில், இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.
டேஜியோன் நகரில் உள்ள ஹன்வா ஏரோஸ்பேஸ் (Hanwha Aerospace) நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், அவர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெடி விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கும் நாங்கள் தலைவணங்கி மன்னிப்புக் கோருகிறோம்,” என்று நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.




